புதுச்சேரி
ரூ.35 லட்சம் செலவில் புனரமைப்பு பணி
- பாகூர் தொகு–திக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
- இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
பாகூர் தொகு–திக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தை புனரமைத்து மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால், பொதுப்பணித்துறை சார்பில் இப்பள்ளி கட்டிடத்தை ரூ.35 லட்சம் செலவில் புதுப்பித்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கட்டிட ஒப்பந்ததாரர் ஆனந்தன், தி.மு.க., தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.