மழையால் பாதிக்கப்பட்ட நெல், பயிர்களுக்கு நிவாரணம்-காங்கிரஸ் கோரிக்கை
- காரைக்கால் உள்ளிட்ட நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சேதம் அடைந்து விட்டன.
- காரைக்காலில் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஹெக்டருக்கு என்ற கணக்கில் வழங்க வேண்டும்
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வாரங்களில் காவேரி ஆற்றின் கடைமடை பகுதியான டெல்டா மாவட்டமான காரைக்கால் உள்ளிட்ட நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் பல இடங்களில் சேதம் அடைந்து விட்டன. இதே போல உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
எதிர்பாராத தவறான நேரத்தில் பெய்த பெருமழையால் முதலையே இழந்து நஷ்டத்தை அடைந்து கண்ணீரோடு இருக்கின்ற விவசாயிகளின் துயரத்தை குறைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே புதுவை அரசும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஏக்கருக்கு நிவாரணம் ரூ.20 ஆயிரம் என்பதோடு சற்று சேர்த்து, காரைக்காலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஹெக்டருக்கு என்ற கணக்கில் வழங்க வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர் பயிர்களுக்கும் தமிழ்நாடு போல நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு ஏ.வி. சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.