புதுச்சேரி

வாலிபர் வயிற்றில் சிக்கிய சிறு இரும்பு துண்டு

வயிற்றில் சிக்கிய இரும்பு துண்டு அகற்றம்

Published On 2022-10-01 05:22 GMT   |   Update On 2022-10-01 05:22 GMT
  • புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
  • எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.

புதுச்சேரி:

புதுவை கனக–செட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ–மனையில் 24வயது மதிக்கத்தக்க வாலிபர் கடும் வயிற்று வலியுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த பொது மருத்துவர் டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் மருத்துவ குழுவினர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வாலிபரின் வயிற்று பகுதியில் சிறிய இரும்பு துண்டு இருப்பதும் அதன் காரணமாக அவர் வயிற்று வலியால் அவதிப்படுவதை உறுதி செய்தனர்.

உடனடியாக எண்டோஸ்கோப்பி மூலம் மயக்க மருந்து இல்லாமல் 25 மி.மீ நீளம் கொண்ட சிறு இரும்பு துண்டை அகற்றினர்.

இதுகுறித்து டாக்டர் ரவீந்திர பாரதி, கூறியதாவது:-

வாலிபர் பல்வலிக்கு சிகிச்சைக்காக சென்ற–போது இந்த இரும்பு துண்டை விழுங்கியுள்ளார்.

அந்த இரும்பு துண்டு உணவுடன் கலந்து மிதந்ததால், அதனை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சி.ஆர்ம் என்று சொல்லக்கூடிய தொடர் எக்ஸ்ரே கருவி மூலம் நிதானமாக 3 மணிநேர முயற்சிக்கு பின் இரும்பு துண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. வாலிபர்  வீடு திரும்பினார்.

இவ்வாறு டாக்டர் ரவீந்திர பாரதி கூறினார்.

சிக்கலான இந்த சிகிச்சையை மயக்க மருந்து இல்லாமல் எண்டோஸ் கோப்பி மூலம் மேற்கொண்ட டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் குழுவினரை பிம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல், கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News