புதுச்சேரி

காட்டுநாயக்கன் சமூக மக்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

Published On 2023-11-06 04:28 GMT   |   Update On 2023-11-06 04:28 GMT
  • காட்டுநாயக்கன் சமூக மக்கள் சங்கம் வலியுறுத்தல்
  • வேலை வாய்ப்பிலும் ஒரு சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பயன் பெற்று வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்க ஆலோசனை கூட்டம் முத்தி ரையர் பாளையம் கல்கி கோவில் அருகில் உள்ள மதுரை வீரன் ஆலயத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் சங்க தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் முத்தையன், கவுரவ தலைவர் சுப்பு ராயலு, செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2010-ம் ஆண்டு புதுவை ஆணை பிறப்பித்த தின் அடிப்படையில் பழங்குடி மக்கள் கல்வியி லும், வேலை வாய்ப்பிலும் ஒரு சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பயன் பெற்று வருகிறார்கள்.

ஆனால் தற்போது புதுவை அரசு காவல் துறையில் ஊர் காவல் படைக்கு 500 நபர்களை பணியில் அமர்த்து ஆணை வெளியிட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்ட பழங்குடி யினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப் படவில்லை.

எனவே தற்போது நடைபெற உள்ள ஊர்காவல் படை பணி தேர்வில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளித்து ஆணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

Tags:    

Similar News