சுவாச ஒவ்வாமை மருத்துவ கருத்தரங்கம்
- மூக்கு தொண்டை பிரிவின் சிறப்பு நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.
- புதுவை அரசு மருத்து வமனையின் மருத்துவர்கள் சிவசங்கர், சண்முகநாதன், ஷைலஜா ஆகியோ ர் உரையாற்றினார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரசு தலைமை மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரியின் காது, மூக்கு தொண்டை பிரிவின் சிறப்பு நிபுணர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.
இதில் சுவாச ஒவ்வாமைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அதன் நோயறிதல் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வெங்கடேஸ்வரா கல்லூரியின் காது. மூக்கு.
தொண்டை பிரிவு டாக்டர் பிரபு, ஜிப்மர் மருத்து வமனையின் துறை தலைவர் சிவராமன், பேராசிரியர் கலையரசி, மகாத்மா காந்தி கல்லூரியின் பேராசிரியர் விஜய சுந்தரம், ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ரவி கண்ணன், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியின் நெஞ்சக மருத்துவ துறை தலைவர் வெங்கடேஸ்வரபாபு, புதுவை அரசு மருத்து வமனையின் மருத்துவர்கள் சிவசங்கர், சண்முகநாதன், ஷைலஜா ஆகியோ ர் உரையாற்றினார்கள்.