சாலையோர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்
- அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
- தடை செய்த பொருட்களை உணவுகளில் கலப்பதை தடுத்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சுகாதாரமற்ற உணவு விற்பனையால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுவை நகரப்பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் ஷவர்மா உள்ளிட்ட பல்வேறு துரித உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இவற்றுக்கு பயன்ப டுத்தப்படும் இறைச்சிகள் சுகாதா ரமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனை உணவு பாதுகாப்புதுறை ஆய்வு செய்வது கிடையாது. எனவே தமிழகத்தை போல் புதுவையிலும் பலி ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து உள்ளாட்சி துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகங்கள், சலையோர உணவு கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
தடை செய்த பொருட்களை உணவுகளில் கலப்பதை தடுத்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுவை மாநிலம் முழுவதும் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்த கவர்னர் தமிழிசை அனுமதி அளித்துள்ளார்.இதற்காக அரசு ரூ.360 கோடி செலவு செய்வது மக்களுடைய வரி பணத்தை வீணடிக்கும் செயலாகும்.
பிரீபெய்டு மீட்டர் பொருத்த முன்பணமாக ரூ.9 ஆயிரம் கேட்கின்றனர். பிரீபெய்டு மீட்டர் பொருத்துவது மக்களை வஞ்சிக்கும்.புதுவை மின்துறை என்பது ஒரு கூட்டுகொள்ளை அடிக்கும் துறையாக உள்ளது.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.