- ரூ.1 3/4 கோடியில் புதிய மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது
- முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட வீதிகளில் மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூமி, பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகளில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்குப் பிரிவு மூலம் ரூ.1 3/4 கோடியில் புதிய மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது
இதற்கான பூமி பூஜை விழா வில்லியனூர் அண்ணாசிலை அருகில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமி நாராயணன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் சுந்தரராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட வீதிகளில் மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூமி, பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன்,
தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ், நிர்வாகிகள் ராஜி, ஜலால் பாய், ரமணன், அக்பர், சபரிநாதன், அருணாசலம், பாஸ்கரன், மணவாளன், சேகர், ராஜேந்திரன், ஏழுமலை, ரபீக், வெங்கடேஷ், கரிகாலன், ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.