புதுச்சேரி

கோப்பு படம்.

தனியார் கல்லூரியை விலைக்கு வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி

Published On 2023-07-09 07:07 GMT   |   Update On 2023-07-09 07:07 GMT
  • இதனை நம்பி கணேசன் தனது பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்ற பணத்தை சேர்த்து ரூ.35 லட்சத்தை ராம லிங்கத்திடம் அளித்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி குமரேசன், சந்தோஷ்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே திருக்காஞ்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் கணேசன் (வயது52). இவர் நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். அதே தொழிற்சாலையில் நெட்டப்பாக்கம் போலீஸ் வீதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். ஒரே இடத்தில் இருவரும் வேலை பார்த்து வந்ததால் இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம்.

இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ராமலிங்கம் தனக்கு தெரிந்த நாகர் கோவில் ஆண்டாள் குளம் பகுதியை சேர்ந்த குமரேசன் (45) மற்றும் கேரள மாநிலம் இடிக்கி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(46) ஆகியோர் மூலம் காரைக்காலில் தனியார் கல்லூரி ஒன்று விலைக்கு உள்ளதாக கணேசனிடம் தெரிவித்தார்.

அந்த கல்லூரியை விலைக்கு வாங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ராமலிங்கம் கூறினார். இதனை நம்பி கணேசன் தனது பணம் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்ற பணத்தை சேர்த்து ரூ.35 லட்சத்தை ராம லிங்கத்திடம் அளித்தார்.

அந்த பணத்தை ராம லிங்கம் குமரேசன் மற்றும் சந்தோஷ்குமாரிடம் வழங்கி யதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கல்லூரியை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு ராமலிங்கத்திடம் பலமுறை கணேசன் கேட்டார்.

அதற்கு கணேசன் பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்தார்.

இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கணேசன் இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி குமரேசன், சந்தோஷ்குமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 3 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News