புதுச்சேரி

கோப்பு படம்.

சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் ரூ.4½ லட்சம் நகை கொள்ளை

Published On 2022-08-15 08:28 GMT   |   Update On 2022-08-15 08:28 GMT
  • வில்லியனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் ரூ.4½லட்சம் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
  • தற்போது ஆலை இயங்காததால் அருள்மொழி வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

புதுச்சேரி:

வில்லியனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் ரூ.4½லட்சம் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வில்லியனூர் கோபாலன்கடை பெரம்பை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (வயது56). இவர் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

தற்போது ஆலை இயங்காததால் அருள்மொழி வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே அருள்மொழியின் மூத்த மகளுக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்ததால் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை நடந்து வருகிறது.

இதற்காக வீட்டில் இருந்து கட்டில், பீரோ போன்ற பொருட்களை வீட்டின் வெளி பக்கமுள்ள குளியல் அறை அருகே வைத்திருந்தனர். பீரோ சாவிகளை எப்போதுமே அதிலேயே தொங்க விட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அருள்மொழியின் மனைவி பத்மாவதி பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து நகைகளை கொள்ளை யடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து அருள்மொழி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வீட்டில் பெயிண்ட் வேலை செய்தவர்கள் யாரேனும் நகைகளை கொள்ளை யடித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News