புதுச்சேரி

ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-05 08:41 GMT   |   Update On 2023-10-05 08:41 GMT
  • சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் தலைமை வகித்தார்.
  • போக்குவரத்து சட்ட விதிகளின்படி அநியாய அபராத கட்டண முறையை கைவிட வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை போக்குவரத்து துறையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள

ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் ஆணையர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க தலைவர் மணவாளன், தனியார் போக்கு வரத்து சங்க தலைவர் அந்தோணி தாஸ், பொதுச்செயலாளர் மதிவாணன், ஆட்டோ சங்கம் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள் துளசிங்கம், ராஜா, ராமு, ராஜா, செல்வம், சங்கர், சகாயராஜ், செந்தில், சத்தியமூர்த்தி, பழனி பாலன், சதீஷ், மனோகர், ரவிக்குமார், குமரவேல், ஆனந்த், மருதப்பன், சீனுவாசன், மணிபாலன், மது, தினேஷ் குமார், ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் வாகன ஆவணங்களை முறைப்படுத்தி உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

புரோக்கர்களுக்கு முன்னு ரிமை கொடுக்கும் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய போக்குவரத்து சட்ட விதிகளின்படி அநியாய அபராத கட்டண முறையை கைவிட வேண்டும்.

கட்டண விபர தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

Tags:    

Similar News