பாரததேவி ஆங்கில பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- மதகடிப்பட்டில் உள்ள பாரததேவி ஆங்கில உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- கண்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் இளமதியழகன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள பாரததேவி ஆங்கில உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் இளமதியழகன் தலைமை தாங்கினார். மாநில சுயநிதி தனியார் பள்ளிகள் சங்க கூட் டமைப்பு தலைவர் ரங்கநாதன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சங்க பொதுச்செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் சம்பத், சுப்பிரமணி, தனசெல்வம் ஆகியோர் அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர். கண்காட்சியில் தானியங்கி அறிவியல் சாதனங்கள், ரோபோ விண்வெளி மனிதன், இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கணிப்பொறியின் அடுத்த கட்ட வளர்ச்சி, விமான பயன்பாடு, குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர்கள் தேவி, சரவணன், ஆசிரியர்கள் வாசுகி, கலையரசி, சர்மிளா, தமிழரசி, ரம்யா , பிரித்திகா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.