அரசியல் அடிப்படையில் கறவைமாடு பயனாளிகள் தேர்வு
- தலைமை செயலரிடம் காங்கிரஸ் புகார்
- விவகாரத்தில் தலையிட்டு கால்நடை பரா மரிப்பு துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பயனாளிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை செயலர் ராஜீவ்வர்மாவை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் கால்நடைதுறை மூலம் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வதாரத்திற்கு கறவை மாடு, ஆடுகள் வழங்கப்படு கிறது. 2022-23-ம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ரூ.2.3 கோடி நிதிஒதுக்கப்பட்டது. அதில் பயனாளிகள் தேர்வு வெளிப்படைத்தன்மை இல்லாமல் முறைகேடாக நடந்துள்ளது.
தகுதியானவர்களுக்கு மானியம் வழங்கவில்லை. 40 கி.மீ தொலைவில் மின்னனு குறிச்சொல்லுடன் வாங்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் பின்பற்றப்படவில்லை. அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு ஊழல் நடந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவினர் பயன்பெறும் வகையில் அரசியல் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு கால்நடை பரா மரிப்பு துறைக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பயனாளிகள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்த ராமன், நீலகங்காதரன் ஆகியோர் உடனிருந்தனர்.