null
7 மையங்களில் கள மேற்பார்வையாளர் தேர்வு
- 53 சதவீதம் பேர் ஆப்சென்ட்
- தேர்வு எழுத 2 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 299 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
புதுச்சேரி:
புதுவை பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தில் கள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று காலை 10 மணி முதல் 12 வரை நடந்தது.
புதுவையில் தாகூர் கலைக் கல்லூரி - 2, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு பள்ளி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, குளுனி பள்ளி என 7 மையங்களில் தேர்வு நடந்தது.
தேர்வு எழுத 2 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 299 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 53 சதவீதம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
முன்னதாக காலை 8.30 மணி முதல் தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து, தேர்வர்கள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட தகவல் தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லாத வகையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். பின்னர், ஹால்-டிக்கெட் சரிபார்க்க ப்பட்டு தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்க ப்பட்டனர். மேலும், தேர்வு கட்டுப்பாட்டாளரும், அரசு செயலருமான குமார், உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் ஜெய்சங்கர், கண்ணன் ஆகியோர் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல், போக்குவரத்து துறையில் அமலாக்க உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற்றது.