புதுச்சேரி

நேரு எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

மறைமலை அடிகள் சாலையில் சர்வீஸ் ரோடு

Published On 2023-11-21 08:01 GMT   |   Update On 2023-11-21 08:01 GMT
  • போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறியுள்ளது.
  • மறைமலை அடிகள் சாலையின் குறுக்காக எதிர்ப்புறத்தில் செல்கின்றனர்.

புதுச்சேரி

புதுவை உருளையன்பேட்டை தொகுதி மறைமலை அடிகள் சாலை மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறியுள்ளது.

மறைமலை அடிகள் சாலை புதிய பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள தென்னஞ்சாலை ரோடு, கென்னடி நகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கடலூர் சாலையிலிருந்து மறைமலை அடிகள் சாலையின் குறுக்காக எதிர்ப்புறத்தில் செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து குழப்பம் ஏற்படுகிறது. மறுபுறத்தில் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள ஒத்தவாடை வீதி, முல்லை நகர் பகுதியை சேர்ந்த மக்கள் போலீஸ் நிலையத்தை ஒட்டி எதிர்புறம் வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க இப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக தென்னஞ்சாலை வரை சுமார் 15 அடி அகலத்தில் சர்வீஸ் சாலை அமைப்பது என்றும், அதில் எதிர்ப்புறமாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.

மறுபுறத்தில் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் 10 அடி அகலத்தில் சர்வீஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உமாபதி, திருஞானம், போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மாறன், மின்துறை செயற்பொறியாளர் கனியமுது, நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், அரசு துறை உதவி பொறியாளர்கள் இளநிலை பொறியாளர்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் பலர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News