புதுச்சேரி

கோப்பு படம்.

அட்சய திருதியைக்கு நகை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது

Published On 2023-04-22 09:19 GMT   |   Update On 2023-04-22 09:19 GMT
  • இன்றும் நாளையும் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை
  • ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புதுச்சேரி:

அட்சய திருதியை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம்தான். அட்சய திருதியை என்பது மங்கள கரமான தொடக்கத்திற்கு உகந்த நாள். ஆனால் அதையும் தாண்டி தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.

ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. இன்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்பதால் இன்று காலையிலேயே ஏராளமானோர் நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கினார்கள்.

புதுவையில் நேரு வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, பாரதி வீதி, நெல்லுமண்டி சந்து, மிஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் நகைகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

Tags:    

Similar News