புதுச்சேரி

சித்தா ஆயுர்வேதிக் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி.

சித்தா ஆயுர்வேதிக் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2023-02-27 06:09 GMT   |   Update On 2023-02-27 06:09 GMT
  • ஆயுர்வேதிக் மருத்துவ முறையின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
  • ஆயுர்வேதிக் மருத்துவ முறைகளும் எவ்வாறு நிரந்தரமாக சரி செய்வது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர்.

புதுச்சேரி:

புதுவை காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓரியண்ட்ஸ் குளோப் மார்க்கெட்டிங் சார்பில் சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவ முறையின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

இதில் ஓரியண்ட்ஸ் ப்ளூ மார்க்கெட்டிங் ஆலோசகர்கள் ரவி, ரவிச்சந்திரன், ரவிசங்கர், விஜயநிர்மலா, சிவராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் கொரோனா காலகட்டத்தில் இருந்து சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவம் பொது மக்களை எவ்வகையில் பாதுகாத்தது என்பது குறித்தும், தற்பொழுது மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் நீரிழிவு நோய், உடல் வெப்பம், உடல் சோர்வு போன்ற பல பல நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது, வந்த பின்னால் ஆயுர்வேதிக் மருத்துவ முறைகளும் எவ்வாறு நிரந்தரமாக சரி செய்வது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினர்.

இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News