312 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
- மாணவர்களுக்கு இலவச சைக்கிகள், புத்தகம் வழங்கியுள்ளோம். ரொட்டி பால் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை மிஷன் வீதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நிதியுதவி வழங்கி பேசியதாவது:-
நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 9 மாத நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும். புதுவையில் 312 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச சைக்கிகள், புத்தகம் வழங்கியுள்ளோம். ரொட்டி பால் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்.
லேப்டாப் வழங்கும் திட்டம் 40 நாளில் தொடங்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே எண்ணம் கொண்ட ஆட்சி உள்ளதால் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடிகிறது. கல்வித்துறைக்கு கடந்த ஆண்டைவிட ரூ.100 கோடி அதிகமாக ஒதுக்கப் பட்டுள்ளது. கல்விதான் மிகச்சிறந்த ஆயுதம், அதை கொடுக்க அரசு தயாராக உள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும். சந்திராயன் திட்டத்தில் தமிழர்கள் இடம்பெற்றனர். அதைப்போல நீங்களும் விஞ்ஞானியாக உருவாகலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அருட்தந்தை ரொசாரியோ, தலைமை ஆசிரியர் வின்சென்ட், துணை தலைமை ஆசிரியர் அகஸ்டின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.