புதுச்சேரி

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் 

லாரியில் ரகசிய அறை அமைத்து எரிசாராயம் கடத்தல்

Published On 2023-07-05 08:46 GMT   |   Update On 2023-07-05 08:46 GMT
  • தொழிற்பயிற்சி மையம் எதிரில் சந்தேகப்ப டும்படியாக சில நாட்களாக லாரி ஒன்று நின்றுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
  • 3 வெள்ளை நிற கேன்கள் இருந்தது. அதில் 105 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை கலால் துறை சார்பில போலி மதுபானம், எரிசாராயம் கடத்துவதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையினர் புதுவை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேட்டுப் பாளையம் பகுதியில் தாசில்தார் சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேட்டுப்பாளையம் தொழிற்பயிற்சி மையம் எதிரில் சந்தேகப்ப டும்படியாக சில நாட்களாக லாரி ஒன்று நின்றுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வாகன எண்ணின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த லாரி விசாகப்பட்டினத்தில் இருப்பது போல காட்டியுள்ளது.

இதனால் மேட்டுப்பா ளையத்தில் நின்றுக் கொண்டிருந்த வாகன எண் போலியானது என தெரியவந்தது. இதனையடுத்து லாரியை சோதனை செய்ததில், அதில் ரகசிய அறை இருந்தது. அதில் 3 வெள்ளை நிற கேன்கள் இருந்தது. அதில் 105 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். இதனையடுத்து அந்த போலி பதிவு எண் கொண்ட லாரியின் உரிமை யாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News