சுற்றுலா தலங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்
- புதிய வகை உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- கூட்டத்தில் ஆணையர் ரமேஷ் பேசுகையில் மக்கள் அனைவரும் பொதுஇடங்கள், கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதிய வகை உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி புதுவை மாநில அரசு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத் சிதுகளுக்கு சில வழிகாட்டுதலை பின்பற்ற கூறியுள்ளது.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் அரியாங்குப்பம் கொம் யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொழுதுபோக்கு மற்றும் உணவக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஆணையர் ரமேஷ் பேசுகையில் மக்கள் அனைவரும் பொதுஇடங்கள், கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட் பட்ட அனைத்து உணவகங்கள், மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை நிறுவனங் கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண் டும்.
முககவசம், தடுப்பூசிகள் செலுத்தியதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வழிபாட்டு தலங்களில் முன்பு பின்பற்றிய கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.