அரசு திட்டங்களை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆய்வு
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் சந்தை யினை திறந்து வைத்தார்.
- போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் மாகிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மலையாள மொழி பேசும் மக்களின் திருவிழாவான ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் சந்தை யினை திறந்து வைத்தார்.
பின்னர் உஸ்மான் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாலை மாகி அரசு சென்ட்ரல் ஹாலில் நடை பெற்ற அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு மாகி பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் பரம்பத், அசோக் பாபு, மாகி பிராந்திய நிர்வாகி சிவராஜ் மீனா,போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரத்தினவேல், ஜெயக்குமார், தொகுதி தலைவர் தினேஷன், மனோஜ், சுனில், ரஜீஷ், பிரதீஷ், திரிஜேஷ், ஜெயேந்திரன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.