புனித பேட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
- பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
- புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 251 மாணவர்கள் தேர்வு எழுதினர்
புதுச்சேரி:
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 251 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவ ர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பள்ளி பெற்றுள்ளது.
600 மதிப்பெண்களுக்கு 590 மதிப்பெண்கள் பெற்று பவதாரணி என்ற மாணவி பள்ளியில் முதலிடம் பெற்றார். 589 மதிப்பெண் பெற்று மாணவர் ஆதித்யா 2-ம் இடத்தையும், 588 மதிப்பெண் பெற்று மாணவி சாய் பிரணிதா 3-ம் இடத்தையும் பெற்றனர்.
பள்ளியில் தேர்வு எழுதிய 251 மாணவர்களில் 162 மாணவர்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனர்.
தமிழில் மாணவர் பரத் 98, பிரெஞ்சில் மாணவி சுஷ்மிதா 99, சமஸ்கிருதத்தில் மாணவி பிரணிதா 98, ஆங்கிலத்தில் பிருந்தா, கதிரவன் 98, கணிதத்தில் நந்தினிதேவி 99, இயற்பியலில் சுஷ்மிதா 100, வேதியியலில் பிரணிதா 100, கதிரவன் 100, லோகேஸ்வரன் 100, நவ்யா தர்ஷினி 100, பரத் 100, உயிரியலில் கதிரவன் 100, மனோன்மணிலெபேல் 100, அஷ்வந்த் 100, கணிணி அறிவியலில் சுஷ்மிதா 100, சுதர்சன் 100, பிருந்தா 100, ஹரீஷ் 100, தானேஸ்வர் 100, அசீம்அகமது 100, தர்ஷன் 100 மதிப்பெண் பெற்றனர்.
வணிகவியலில் ஆதித்யா 100, கணக்கு பதிவியலில் பவதாரிணி 100, ஆதித்யா 100, விஷால் 100, தனஸ்ரீ 100, காவியா 100, பொருளாதாரத்தில் பவதர்ஷினி 100, வணிக கணிதத்தில் பவதாரணி 100, ஆதித்யா 100, விஷால் 100, தனஸ்ரீ 100 மதிப்பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, ஆலோசனைக் குழு உறுப்பி னர்கள், வகுப்பாசி ரியர்கள் எமில், இளவழகன், நடராஜன், வாசுகி, அனுராதா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.