மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம்
- இந்திய நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கம் மற்றும் புதுவை மாநில ஒருங்கிணைந்த விளையாட்டு வீரர்களின் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
- முகாமிற்கு கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
இந்திய நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, புதுவை மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கம் மற்றும் புதுவை மாநில ஒருங்கிணைந்த விளையாட்டு வீரர்களின் நல சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம் மேட்டுப்பாளையம் தமிழ் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
முகாமிற்கு கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் மோகன், அமிர்தராஜ், கிருஷ்ணராஜ். அய்யனார், பிரவீன், குமார், விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய நடுவர்கள் அபிலாஷ், ராகுல், செபஸ்டியன், சந்தோஷ், மோகன் சந்துரு, அன்புமணி ஆகியோர் பயிற்சி முகாமின் தேசிய நடுவராக செயல்பட்டனர்.
பயிற்சி முகாமில் அதிநவீன கட்டா பிரிவு, சண்டை பிரிவு, ஆயுதப் பிரிவு மற்றும் புதிய விதிமுறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டன, இதில் சிறந்து விளங்கிய, 120 மாணவ-மாணவிகளுக்கு கலர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை கராத்ேத சங்கத் தலைவர் இளங்கோவன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.