புதுச்சேரி

கோப்பு படம்

நகையை திருடும் கூட்டுறவு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை

Published On 2023-05-24 05:27 GMT   |   Update On 2023-05-24 05:27 GMT
  • புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
  • இதற்கு காரைக்காலில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளதுதான் காரணம்.

புதுச்சேரி:

வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரைக்காலில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ளதுதான் காரணம்.

 மதுபான கடைகளை திறக்க காட்டும் ஆர்வத்தை அரசு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காட்டவில்லை. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காவிரியில் நீர் திறந்து வந்தாலும் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல் உள்ளது. எனவே ஒரு மாதத்திற்குள்ளாக அரசு காரைக்காலில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வார வேண்டும்.

மணல் மாபியாவுக்கு அரசு ஆதரவு அளிப்பதை கைவிட்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். கூட்டுறவு விவசாய சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உடனடி யாக கடன் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு தேவையான டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களை வழங்க வேண்டும்.

கூட்டுறவு விவசாய சங்கங்களில் வாடிக்கையாளர்களின் நகைகளை திருடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News