புதுவை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
- புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.
- நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர்களை மாணவர்கள் அதிகளவில் சேர்க்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 23-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 13-ந் தேதி தொடங்கி நடக்கிறது.
நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர்களை மாணவர்கள் அதிகளவில் சேர்க்கின்றனர்.
1-ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். மாற்று சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ் தேவையில்லை என்பதால் எளிதில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டாக கொரோனவால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.
இதனால் அரசு பள்ளிகளுக்கு கூடுதலாக மவுசு ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதும்,
சி.பி.எஸ்.இ பாடத்திட்டம், ஆங்கில வழிக்கல்வி ஆகியவையும் பெற்றோர்களிடம் அரசு பள்ளிகள் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.
அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த கல்வியாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.