சுதந்திர போராட்ட நட்சத்திரங்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்
- கவர்னர் தமிழிசை பேச்சு
- காலனி ஆதிக்கத்தின் பெயரில் இருந்ததை மாற்ற வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்.
புதுச்சேரி:
புதுவையில் என் மண், என் தேசம் இயக்கம் 3 நிகழ்வாக நடந்தது.
முதல் நிகழ்வாக கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை 108 கிராம பஞ்சாயத்து அளவிலும், 2-ம் கட்டமாக ஆகஸ்டு 16 முதல் 20-ந் தேதி வரை 5 நகராட்சிகள், 3 வட்டார அளவிலும் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
3-வது கட்டமாக ஆகஸ்டு 18-ந் தேதி 108 கிராம பஞ்சாயத்துகள், 5 நகராட்சி களில் சேகரிக்கப்பட்ட புனித மண் அமிர்த கலசங்கள், மரக்கன்றுகள், செடி ஆகியவை எடுத்து வரப்பட்டு அவற்றை ஒன்றாக கலந்து அதில் மரக்கன்றுகள் நட்டு மாநில அளவில் அமிர்த பூங்கா வனம் பாரதி பூங்காவில் அமைக்கப்பட்டது.
2-ம் நிகழ்வாக இல்லம்தோறும் ஒரு பிடி மண், ஒரு பிடி அரிசி தானமாக பெறப்படும் நிகழ்ச்சி 139 கிராமத்திலும், 108 கிராம பஞ்சாயத்திலும், 5 நகராட்சியிலும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடந்தது.
தற்போது 3-ம் நிகழ்வாக மாநில அளவிலான அமிர்த கலச யாத்திரை ஒருங்கி ணைக்கும் நிகழ்வு இன்று காமராஜர் மணிமண்ட பத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை 5 உறுதி மொழிகளை வாசித்தார். விழாவில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். பிரதமர் நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முழு ஆண்டும் கொண்டாடப்பட வேண்டும் என சுதந்திர அமிர்த பெருவிழாவை தொடங்கி வைத்தார்.
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்று வோம் என உறுதி யேற்றுள்ளோம்.
பிரதமர் 2047-க்குள் வல்லரசு நாடாக மாற வேண்டும் என விருப் பத்தை தெரிவித்து அதற்காக உழைத்துக் கொண்டிருக்கி றார்.
எந்த நாட்டில் போர் நடந்தாலும், இந்திய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இந்திய மக்கள் பாதிக்கப்படக்கூடாது, தேசம் அவர்களுக்கு துணை நிற்கும் என பிரதமர் செயல்படுகிறார்.
புதுவைக்கு சுதந்திர போராட்ட வரலாறு உள்ளது. நாம் நாட்டுப்பற்றா ளர்களாக விளங்க வேண்டும்.
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு பல வகையில் புதுவை உதவி செய்துள்ளது. இதில் பல ரகசியங்கள், சரித்திரம் உள்ளது. இந்த ரகசியங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். வீரசாவர்க்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அவரின் தியாகத்தைக்கூட கேள்வி எழுப்பும் சிலர் உள்ளனர்.
அவர் எழுதிய புத்தகத்தை ஆங்கில அரசு தடை செய்கிறது. ஒரே ஒரு புத்தகம் புதுவையில் இருந்தது. அந்த புத்தகம்தான் மொழி பெயர்ப்பு செய்ய ப்பட்டு சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டது. புதுவையில் உண்மையான சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்டது எது? என்ற விபரங்களை அரசு ஆவணப்படுத்த வேண்டும்.
பாரதம் என்ற சொல் நாட்டில் 7 ஆயிரம் ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரத மாதா என்றுதான் அழைக்கிறோம். அதற்காகத்தான் தேசிய கல்வி கொள்கையில் இந்தியாவை பாரதம் என அழைக்கலாமா? என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா அல்லது பாரதம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பாரதியாரே, பாரத தேசம் என தோள் கொட்டுவோம் என கூறியுள்ளார். இந்தியாவை பாரதம் என அழைப்பதில் தவறில்லை என்பதே என் கருத்து. சென்னை மாகாணம் தமிழ் நாடு என மாற்றப்பட்டபோது ஏற்பட்ட உணர்ச்சி, இந்தியாவை பாரதம் என கூறும்போது தேசப்பற்று ஏற்படும்.
இதை ஆரோக்கியமான விஷயமாக கருத வேண்டும். இதை எதிர்த்துத்தான் பேசுவோம் என நினைக்கக்கூடாது. காலனி ஆதிக்கத்தின் பெயரில் இருந்ததை மாற்ற வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். நாட்டைப்பற்றிய உணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.
சினிமா நட்சத்திரங்களை பற்றி தெரிந்தவர்களுக்கு நாட்டின் சுதந்திர நட்சத்திரங்களை பற்றி தெரியவில்லை என்பது வேதனை தருகிறது. சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அதிகமாக படிக்கவேண்டும். என் மண், என் தேசம் என்றால் சுதந்திரம் பெற நாடு என்ன பாடுபட்டது? என தெரிந்து கொள்ள வேண்டும். தெரியப்படாத சுதந்திர வீரர்களை தெரிந்துகொள்ள வேண்டும். புதுவையில் ஆதாரத்துடன் சுதந்திர கனலை ஊட்டியது தொடர்பான முழுமையான புத்தகம் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் செல்வம், கலைபண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.