புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் இடியுடன் கோடை மழை

Published On 2023-04-25 04:37 GMT   |   Update On 2023-04-25 04:37 GMT
  • கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றவர்கள் மழையில் நனைந்த படி சென்றனர்.
  • வெயிலின் காரணமாக அவசர அவசரமாக ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் மார்ச் மாத இறுதியிலேயே வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது. மேலும் கொரோனா தாக்கமும் லேசாக அதிகரித்ததால் மார்ச் மாதம் 11 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வெயிலின் காரணமாக அவசர அவசரமாக ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி முதல் கோடை விடுமுறை பள்ளிகளில் தொடங்கியது.மேலும் 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் வெயில் தாக்கத்தால் நோய்வாய் பட்டவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் என உத்தரவு அறிவித்தது. வெயில் தாக்கத்தால் புதுவை நகர பகுதியில் பகல் நேரத்தில் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் புதுவையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.காலை 7 மணிக்கு இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது.வெயில் தாக்கம் மறைந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. புதுவை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை கடற்கரை சாலையில் நடை பயிற்சிக்கு வந்தவர்கள் மழையில் நனைந்த படி கோடை மழையை ரசித்தனர்.

Tags:    

Similar News