புதுச்சேரி

புதுச்சேரியில் ஒரே கிராமத்தில் 11 மதுக்கடைகள்

Published On 2022-06-11 11:52 GMT   |   Update On 2022-06-11 11:52 GMT
  • கடலூர் மாவட்டத்திலிருந்து தென் பெண்ணையாற்றில் நீந்தி இங்கு வந்து மதுபிரியர்கள் மது குடித்து விட்டு செல்கிறார்கள்.
  • பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 11 மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் இருந்து வருகிறது.

புதுச்சேரியின் நெற்கள ஞ்சியமாக விளங்கும் பாகூர் பகுதி தற்போது மது பார்களின் களஞ்சியமாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டத்தை ஒட்டி பாகூர் பகுதி இருந்து வருவதால், கடலூர் பகுதி மது பிரியர்களுக்கு ஏதுவாக மதுக்கடைகள், சாராயக்கடை. கள்ளுக்கடைகள் ஏராளமாக இங்கு உள்ளன.

கடலூர் மாவட்டத்திலிருந்து தென் பெண்ணையாற்றில் நீந்தி இங்கு வந்து மதுபிரியர்கள் மது குடித்து விட்டு செல்கிறார்கள்.

இங்குள்ள மதுக்கடைகளை நகைக்கடை போல அலங்கரித்து, மது பிரியர்களை உற்சாகப்படுத்திய உள்ளனர்.

மேலும் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை அறிவித்து விருகின்றனர். குறிப்பாக பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 11 மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் இருந்து வருகிறது.

எவ்வளவு கடைகள் வந்தாலும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனால் பல சிறு, சிறு திண்பண்டம் கடைகள் உருவாகி வருகிறது. தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறைந்த விலையில் புதுவை பகுதியில் மது கிடைப்பதாலும் பலவகையான மது கிடைப்பதாலும் கூட்டாளிகளுடன் மது வாங்கி விலை நிலத்திலும் காலிமனை பிரிவிலும் குடித்துவிட்டு அங்கேயே பாட்டிலை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.

இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் நன்கு விளைந்த நிலங்களை மனைக்காக விற்பது அல்லது விவசாயத்தை நிறுத்தி காலி நிலமாக வைத்துள்ளனர்.

Tags:    

Similar News