புதுச்சேரி

கோப்பு படம்.

வாலிபரின் 2 ஆண்டு ஜெயில் தண்டனை ரத்து

Published On 2023-11-25 08:03 GMT   |   Update On 2023-11-25 08:03 GMT
  • புதுவை கோர்ட்டில் தீர்ப்பு
  • வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தர விட்டார்.

புதுச்சேரி:

புதுவையை சேர்ந்த 34 வயது பெண்ணின் செல்போனுக்கு 23.9.2022ல் அழைப்புகள் வந்தது.

அதில் பேசியவர் முகநூலில் செல்போன் எண் கிடைத்ததாக கூறி ஆபாசமாக பேசினார். தினமும் அழைப்புகள் வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் முகநூல் வழியாக சென்று பார்த்த போது, அவரையும், அவர் சகோதரியையும் 8 போட்டோக்கள் ஆபாசமாக மார்பிங் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆபாசமாக போட்டோக்களை அனுப்பி யது அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த டிப்ளமோ படித்த முருகன் (வயது.37) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தர விட்டார். அரசு தரப்பில் வக்கீல் கணேஷ்ஞான சம்பந்தன் ஆஜரானார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட முருகன், மனைவி, குழந்தையுடன் வந்து, செய்த தவறுக்கு கண்ணீர் மல்க நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார்.

முருகன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லாத நிலையில், குற்றவாளிகள் நன்னடத்தை கால சட்டம் பிரிவு 4-ன்கீழ் எந்த தவறுக ளிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை யுடன், அவர் மன்னித்து விடு விக்கப்பட்டார். மீண்டும் இதே போல தவறு செய்தால் சிறைக்கு செல்ல வேண்டும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

Tags:    

Similar News