புதுச்சேரி

காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என்.எல்.சி. தொழிலாளர்களை புதுச்சேரி மாநில பாரதிய மஸ்தூர் சங்க செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் நலம் விசாரித்த காட்சி.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவில்லை.

Published On 2023-08-21 06:32 GMT   |   Update On 2023-08-21 06:32 GMT
  • புதுவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி:

கடந்த வாரம் என்.எல்.சிக்கு சொந்தமான பஸ் கவிழ்ந்த விபத்தில் அந்த பஸ்சில் சென்ற என்.எல்.சி. தொழிலாளர்கள் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு நெய்வேலி,கடலூர், புதுவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த தொழிலாளர்கள் புதுவை கனகச்செட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் பாரதிய மஸ்தூர் தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்களும் மற்ற தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களை பாரதிய மஸ்தூர் சங்க புதுவை மாநில செயலாளர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கோதண்டராமன், தொழிற்சாலை நிர்வாகி சுந்தரமூர்த்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை என்.எல்.சி. நிர்வாகத்தினர் வந்து பார்க்கவில்லை. மருத்துவ மனையில் சரியான சிகிச்சை அளிக்கப் படாமல் உள்ளது. பலருக்கு இடுப்பு, தோள்பட்டை, கால் பகுதி யில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் உரிய சிகிச்சை அளிக்க காலம் தாழ்த்தி வருவதாக பாரதிய மஸ்தூர் சங்க புதுவை மாநில செயலாளர் சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

Similar News