பண்டிகை கால உதவி தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும்
- சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்
- பண்டிகை கால உதவி தொகையாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புதுவை சி.ஐ.டி.யூ. மாநில குழு சார்பில் கடந்த 17-ந் தேதி ஆயிரக்க ணக்கான தொழிலா ளர்களை திரட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பேரணி நடத்தியது.
இதில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பண்டிகை கால உதவி தொகையாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுவை அரசு இந்த கோரிக்கையின் மீது எந்த விதமான முடிவும் எடுக்கா மல் காலதாமதம் செய்வது கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து உழைப்பாளி மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் அதை கொண்டாட உதவித்தொகை காலத்தோடு கிடைத்தால்தான் தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும். இது குறித்து முதல்-அமைச்சர் விரைவில் நட வடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும்.
கூப்பன் வழங்குவதை தவிர்த்து அனைவருக்கும் அவர்கள் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.