பல்கலைக்கழக தேர்வுகளை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும்
- ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
- இந்த ஆண்டு பருவ தேர்வுகள் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவை பல்கலை கழக உறுப்பு கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக் கால்,மாகி, ஏனம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் பருவ தேர்வு மே மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, ஜூன் மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கபடுவது வழக்கம். இந்த ஆண்டு பருவ தேர்வுகள் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.
பல்கலைக்கழகம் சார்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இறுதி ஆண்டு பருவ தேர்வு முடித்து, கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாக நேர்காணலில் திறமை மிக்க மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு விட்டன.
தேர்வுகள் நடத்தப் படாமல் உள்ளதால் மாணவர்கள் பணியில் சேர முடியாமல் வேலை வாய்ப்பை இழக்கும் சூழலை புதுவை பல்கலைக்கழக நிர்வாகம் உருவாக்கி உள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல் படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழக நிர்வாகம் மிக துரிதமாக செயல்பட்டு காலதாமதம் செய்யாமல் உடனடியாக தேர்வுகளை நடத்த வேண்டும். முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.