கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையிலும், தலையிலும் ,காலிலும் காயம் அடைந்த வாறு சிகிச்சை பெற்று கட்டு கட்டிக் கொண்டு ஈடுபட்ட னர்.
- விளையாட்டு மைதானம், அரசு கலைக் கல்லூரி, உள்விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், பாகூர் ஏரியை சுற்று லாத்தலம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரி உள்ளனர்.
புதுச்சேரி:
பாகூர் நகர கிளை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் முருகை யன் தலைமை தாங்கினார். கல்கி, செல்வராசு முன்னிலை வகுத்தார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் பெருமாள், பிரபு ராஜ், கொம்யூன் செயலாளர் சரவணன், கொம்யூன் குழு கவுசிகன், மாநில குழு இளவரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்தப் போராட்டத்தில் பாகூர் கொம்யூன் முழு வதும் சாலைகள் சவக்குழியாய் மாறி, சாவின் அச்சத்தில் பயணிக்கும் மக்களை காப்பாற்ற கோரி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையிலும், தலையிலும் ,காலிலும் காயம் அடைந்த வாறு சிகிச்சை பெற்று கட்டு கட்டிக் கொண்டு ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் இப் போராட் டத்தில் அறிவிப்பின்றி தொடர்ந்து மின்தடை ஏற்படுவதை சரி செய்து தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி அதிக படுக்கை கொண்ட நல்ல வழி மையமாக மாற்றி தர வேண்டும். விளையாட்டு மைதானம், அரசு கலைக் கல்லூரி, உள்விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், பாகூர் ஏரியை சுற்று லாத்தலம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரி உள்ளனர்.