இறுதி மருத்துவ மாணவர் பட்டியலை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும்
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் காலியாக நிரப்படாமல் இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில் உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி மாகி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி சேர்க்கை பெற்றார்.
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தற்போது மருத்துவ மாணவர் சேர்க்கை இறுதி கட்ட சிறப்பு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட சிறப்பு கலந்தாய்வு மூலம் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 10 மருத்துவ இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
புதுவை பகுதி தாழ்த்தப்பட்ட பிரிவைசேர்ந்த ஒரு மாணவி சான்றிதழ் அடிப்படையில் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் காலியாக நிரப்படாமல் இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில் உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி மாகி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி சேர்க்கை பெற்றார்.
எனவே புதுவை மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 830-இளநிலை மருத்துவ இடங்களும் நிரப்பபட்டுள்ளது.
சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட 830- இளநிலை மருத்துவ இடங்களின் மாணவர் சேர்க்கை விபரங்களை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிடமிருந்து பெற்று செண்டாக் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
மேலும் தேசிய மருத்துவ கவுன்சில், புதுவை பல்கலைக்கழத்திற்கும், மற்றும் புதுவை சுகாதாரத் துறைக்கும் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இதனடிப்படையில் புதுவை பல்கலைக்கழகம் 2023-2024 மருத்துவ மாணவர் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.