புதுச்சேரி

வீராம்பட்டினத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

மீன்பிடி தடைகால நிவாரணம் நாளை மறுநாள் வழங்கப்படுகிறது

Published On 2023-04-17 09:34 GMT   |   Update On 2023-04-17 09:34 GMT
  • அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு
  • ரூ 6,500 -ஆக உயர்த்தப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவையில் மீன்வளத் துறை சார்பில் மீனவர்களின் விசை படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. டீசலுக்காக மீனவர்கள் நெடும் தூரம் செல்ல வேண்டியுள்ளதால் அந்தந்த கிராமங்களில் டீசல் பங்க் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வீராம்பட்டி னத்தில் ஐ.ஓ.சி. நிறுவனம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலையில் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

மீன்பிடி தடை கால நிவாரணமாக ரூ.5 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை உயர்த்தவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மீன்பிடி தடை கால நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி யின் அனுமதியின் பேரில் ரூ.6 ஆயிரத்து 500 ஆக உயர்த்தியுள்ளோம். உயர்த்தப்பட்ட மீன்பிடி தடை கால நிவாரணம் வரும் (புதன்கிழமை)முதல் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த தொகையை புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 298 மீனவர்கள் பெறுகின்றனர்.

அரபி கடல் பகுதியில் உள்ள மாகி பிராந்தியத்தில் மீன்பிடி தடை காலம் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. அப்போது அங்குள்ள 515 மீனவர்களுக்கு உயர்த்தப்பட்ட தடை கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News