ஒரே நாடு ஒரே தேர்தலை தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர்
- பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆவேசம்
- அரசு அதிகாரியின் பணிகளில் தோய்வு மற்றும் தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் தேர்தல் நடப்பது என்பது மக்கள் வரிப்பணம் மற்றும் நேரம் வீணாக்குவதற்கு சமம்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை தரக்கூடியது. நாட்டு நளினில் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்திய நாட்டுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு வருகிறது. சுமார் 60 ஆயிரம் கோடி மக்களுடைய வரி பணம் இதன் மூலம் மிச்சப்படுத்துகிறது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் பா.ஜனதா மீது கூறும் குற்றச்சாட்டுகளால் தொலைநோக்கு பார்வையில் தொடர்ந்து தேர்தல் நடப்பதால் மாணவர்களுடைய படிப்பு, பொதுமக்களுடைய சிரமம், மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு. அரசு அதிகாரியின் பணிகளில் தோய்வு மற்றும் தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் தேர்தல் நடப்பது என்பது மக்கள் வரிப்பணம் மற்றும் நேரம் வீணாக்குவதற்கு சமம்.
இதை அனைத்து கட்சிகளும் உணர்ந்து ஒரே தேர்தல் ஒரே நாடு என்ற ஆதரிக்க வேண்டும்
ஆரம்பகாலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் இரண்டுமே ஒன்றாக நடந்தது அனைவரும் அறிவர். பாரதிய ஜனதா கட்சி எந்த கருத்தை சொன்னாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு கொண்டுள்ளதை புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.