மாநில அந்தஸ்து விவகாரத்தில் சபாநாயகர் இரட்டை வேடம் போடுகிறார்
- அன்பழகன் குற்றச்சாட்டு
- மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு வழங்காது என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும்.
புதுச்சேரி:
புதுவை மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்க ளிடம் கூறிய தாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெரும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் நாடகம் நடத்துகிறது.
மத்தியில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தபோது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை.
பிரதமருக்கு நெருக்க மான இணை மந்திரியாக பதவியில் இருந்த நாராயண சாமி நினைத்திருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம். மத்தியிலும், மாநிலத்திலும் 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த காங்கிரசும், தி.மு.க. வும் நினைத்திருந்தால் எப்போதோ மாநில அந்தஸ்து பெற்றிருக்கலாம்.
ஆனால் இதை செய்யமால், இண்டியா கூட்டணி கட்சிகள் தற்போது கபடநாடகம் ஆடுகின்றன.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜனதா அரசு வழங்காது என முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும். இப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு மத்திய அரசை அனுகுவோம் என்கிறார். சபாநாயகர் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்.
புதுச்சேரி மாநில பா.ஜனதாவின் நிலைபாடு என்ன? என தெளிவாக கூற வேண்டும். மாநில அந்தஸ்துக்கு தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னெடுத்து செல்ல வேண்டும்.
அனைத்து க்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். காவிரி நீரை பெறவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கேடு நினைப்பவர் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி.
தமிழகத்தில் கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுக்குழுவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றி னோம். வேறு எந்த கட்சிகளும் இதுபோன்று நிறைவேற்றியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.