புதுச்சேரி

தூர்வாரும் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

ஆற்றங்கரையை தூர்வாரும் பணி-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

Published On 2022-12-29 08:50 GMT   |   Update On 2022-12-29 08:50 GMT
மங்கலம் தொகுதி கோட்டைமேடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டைமேடு டோபி கானா முதல் புதுநகர் வரை சங்கராபரணி ஆற்றங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 39 ஆயிரம் செலவில் தூர்வார் நடைபெறுகிறது.

புதுச்சேரி:

மங்கலம் தொகுதி கோட்டைமேடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டைமேடு டோபி கானா முதல் புதுநகர் வரை சங்கராபரணி ஆற்றங்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 39 ஆயிரம் செலவில் தூர்வாருதலும், கோட்டைமேடு கிராம பஞ்சாயத்தில் உள்ள வில்லியனூர் வாய்க்கால் ஆலப்படுத்துதல் பணிக்கான தொகை ரூ 2 லட்சத்து 45 ஆயிரம் செலவிலும் நடைபெறுகிறது.

இதற்கான பணிகளை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மோகன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், ஆய்வாளர் விஜய் அருணாச்சலம், கிராமத்திட்ட ஊழியர்கள் பிரதாப் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News