புதுச்சேரி

திருப்பதி பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அருகில் அமைச்சர் நமச்சிவாயம், புதுவை வேதபாரதி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. உள்ளனர்.

null

திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் திவ்ய ஊஞ்சல் உற்சவம்

Published On 2023-07-23 08:18 GMT   |   Update On 2023-07-23 09:07 GMT
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
  • அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல், தாச சாகித்யா புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுவை வேதபாரதி பாரத பண்பாட்டு அமைப்பு சார்பில் சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் தேவி, பூதேவி சமேத திருமலை திருப்பதி பெருமாளின் ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு ஊஞ்சல் சேவை தொடங்கியது. சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் நடந்தது. தொடர்ந்து வேதகோஷம், புஷ்பயாகம், சாற்றுமுறை, நாதஸ்வர சேவையும், பிற்பகல் 12 மணிக்கு மகா ஆரத்தியும் நடந்தது.

ஊஞ்சல் சேவையில் புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏராள மான பக்தர்கள் சாமியை தரிசித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சாரியா பகடல், தாச சாகித்யா புராஜெக்ட் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஊஞ்சல் உற்சவ ஏற்பாடு களை புதுவை வேதபாரதி, பஜ னோத்ஷவ கமிட்டி தலைவரும், உழவர்கரை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான சிவசங்கரன், தமிழ்நாடு வேதபாரதி செயலாளர் வெங்கட்ராமன், தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் பட்டாபிராமன், பொருளாளர் வரதராஜன், துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், வேதராமன், உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News