புதுச்சேரி

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட தொல்காப்பியர் விருதை சங்க தலைவர் வி.முத்து பெற்று கொண்ட காட்சி.

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு தொல்காப்பியர் விருது

Published On 2022-11-27 04:27 GMT   |   Update On 2022-11-27 04:27 GMT
  • தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது.
  • இந்நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் துணைச் செயலர் மு.அருள் செல்வம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழருவி மணியன், நாகராசன், துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்ற விழாவில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மேலும் தமிழ் சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன், தமிழ் இசை பாடல்களுடன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு,சமூக நீதி, இதழ், பைந்தமிழ், தொல்காப்பியர் விருது என பல்வேறு துறையில் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றி வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

அதுபோல் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருதினை புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்துவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் துணைச் செயலர் மு.அருள் செல்வம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

முடிவில் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது பெற்ற கவிஞர் சிற்பி.பாலசுப்பிரமணியன் ஏற்புரை நிகழ்த்தினார்.

Tags:    

Similar News