தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை-பொது மக்கள் மகிழ்ச்சி
- கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து சிறிது, சிறிதாக அதிகரித்தது.
- தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தி வந்தனர்.
புதுச்சேரி:
புதுவைக்கு நாள் ஒன்றுக்கு 100-டன் காய்கறி கள் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது.
இதில் தக்காளி மட்டும் 30 டன் வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து புதுவை பெரிய மார்க் கெட்டுக்கு தக்காளி வரவழைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. புதுவைக்கு நாள்தோறும் 10 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால் தக்காளி ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனையானது. இதனால் மக்கள் தக்காளி வாங்குவதை குறைத்தனர். தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து சிறிது, சிறிதாக அதிகரித்தது.
இதனால் 4 நாட்களுக்கு முன்பு தக்காரி ரூ.100 வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுவையில் இன்று தக்காளியின் வரத்து 20 டன்னை நெருங்கியது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு பெட்டியின் விலை ரூ.500-க்கும், ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்கப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி ரூ.60 விலையில் விற்கப்பட்டது. தக்காளி விலை குறைவால் மக்கள் சற்றே நிம்மதிய டைந்துள்ளனர்.