கவர்னர் மாளிகை நோக்கி தொழிற்சங்கத்தினர் ஊர்வலம்
- போலீசாருடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
- புதுவையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து
புதுச்சேரி:
மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.
இதன்படி நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்கள் நடந்தது. புதுவையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தொழிற் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் கூட்டாக அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்தை விளக்க 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கோரிக்கை விளக்க பிரசாரமும் நடத்தினர்.தொழிலாளர்கள், மக்கள் விரோத மத்திய மோடி அரசு வெளியேற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள், எந்திரங் கள் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட் கள், கியாஸ் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். அமைப்பு சாரா நலவாரியத்தை நிதிஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளித்து, ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். மின்சார மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.
பிரீபெய்டு மீட்டர்களை பொருத்தக்கூடாது. 200 நாள் வேலை வழங்கி நாள்தோறும் ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று போராட்டம் நடந்தது.
காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கு அருகே அனைத்து தொழிற் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் திரண்டனர். அங்கிருந்து கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.சி.சி.டி.யு. பொதுச் செயலாளர் புருஷோத்தமன், எல்.எல்.எப். செயலாளர் செந்தில், என்.டி.எல்.எப் செயலாளர் மகேந்திரன், எம்.எல்.எப். செயலாளர் வேதா வேணுகோபால், விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கீதநாதன், தமிழ்ச்செல்வன், சங்கர், ரவி, விஜயபாலன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், ஏ.ஐ.டி.யூ.சி. அபிஷேகம், அந்தோணி, தயாளன், சந்திரசேகரன், சி.ஐ.டி.யூ. பிரபுராஜ், முருகன், கொளஞ்சியப்பன், ரவிச் சந்திரன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி, சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சோ. பாலசுப்பிர மணியன், மோதிலால், விஜயா, எல்.எல்.எப். துரை ஜெயக்குமார், எம்.எப்.எல். மாசிலாமணி, என்.டி.எல்.எப். சரவணன் உட்பட நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
ஊர்வலம் நேருவீதி, காந்திவீதி சந்திப்பில் வந்தபோது பேரிகார்டு களை வைத்து போலீசார் தடுத்தனர். இதனால் போலீ சாருக்கும், தொழிற்சங்கத் தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தங்களை ஆம்பூர் சாலை வரை அனுமதிக்க வேண்டும் என போலீசாரு டன் தொழிற்சங்கத்தினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். பேரிகார்டுகளின் மீது ஏறி போலீசாரை தாண்டிச் செல்ல முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர். 300-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்ட னர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.