சாலையோர பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
- 50-க்கும் மேற்பட்ட மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன.
- கடலூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
விழுப்புரம்- நாகப்பட்டி னம் 4 வழி சாலை பணிகள் திருபுவனை பகுதியில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் விருத்தாசலத்தில் இருந்து மக்கா சோளம் ஏற்றி வந்த லாரி திருபுவனை-கடலூர் சாலையில் திரும்பும் போது லாரி சாலையோர பள்ளத்தில் சாய்ந்து நின்றது.
இதனால் லாரியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. அதனை பொதுமக்கள் வாரி சென்றனர்.
அதைத் தொடர்ந்து திருவாண்டார்கோவிலில் உள்ள கோழி தீவன தொழிற்ச்சாலையின் ஊழியர்கள் அந்த பகுதிக்கு வந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் இன்னொரு லாரியில் கோழி தீவன மூட்டைகளை மாற்றி எடுத்துச் சென்றனர்.
இதனால் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருபுவனை- கடலூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.