புதுவை -கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
- புதுவை -கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் இன்று ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பப்பட்டது.
- புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் செல்ல பேரிகார்டு, டிரம் கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை -கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் இன்று ஒரு நாள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பப்பட்டது.
மின்துறையின் சேதமடை ந்த உயர் மின் அழுத்த கேபிள் ரோடு கிராசிங் குழாயை புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடந்தது. இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் பஸ்கள் மாற்றுபாதையில் அனுப்பப்பட்டது.
புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலம் சந்திப்பில் வாகனங்கள் செல்ல பேரிகார்டு, டிரம் கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கம் வழியாக இந்திரா காந்தி சிலை, வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகபாக்கம், தவளகுப்பம், நல்லவாடு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி கடலூர் சாலையில் சென்றது.
கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் தவளகுப்பம் சந்திப்பில் திரும்பி வில்லியனூர் சென்று அரும்பார்த்தபுரம் வழியாக புதுவை பஸ் நிலையம் வந்து சென்றது. இதர வாகனங்கள் முருங்க ப்பாக்கம், மரப்பாலம் சந்திப்பில் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.