புதுச்சேரி

வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய காட்சி. அருகில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் உள்ளனர்.

நலதிட்ட உதவிகள் வழங்கி வைத்தியநாதன் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டம்

Published On 2023-11-04 06:46 GMT   |   Update On 2023-11-04 06:46 GMT
  • காங்கிரஸ் - தி.மு.க. தலைவர்கள் வாழ்த்து
  • இளைஞர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து, பூங்கோத்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி:

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரும் லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் தனது பிறந்தநாளை லாஸ்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கொண்டாடினார்.

இதில் லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முளைப்பாரி எடுத்து கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் கமலா வைத்தியநாதன் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் முளைப்பாரியை வைத்தியநாதன்

எம்.எல்.ஏ.விடம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடந்து வைத்தியநாதன் எம்.எல்.ஏ. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன்

தி.மு.க. மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ., தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சம்பத், செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள்

எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், காவல்துறை, அரசு துறை அதிகாரிகள், கமலா அறக்கட்டளை நிர்வாகிகள், லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சால்வை அணிவித்து, பூங்கோத்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து கடந்த கல்வி ஆண்டில் 10-வது மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்க தொகையும், கமலா அறக்கட்டளை சார்பில் தட்டச்சு பயிற்சி மற்றும் தையல் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகையும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார். பின்னர், 5 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கமலா அறக்கட்டளை நிர்வாகிகள் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள், ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்புபூஜை நடந்தது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகிேயார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்தனர்.

Tags:    

Similar News