வைத்திலிங்கம் எம்.பி. மீது புதுவை எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
- கோவாவில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்ற வளாகத்தை பார்வையிட்டு அதில் உள்ள வசதிகளை பார்வையிட சென்றிருப்பதாக அவர் கூறினார்.
- கோவா பயணத்தை முடித்து கொண்டு எம்.எல்.ஏ. புதுவை திரும்புகின்றனர்.
புதுச்சேரி:
கோவா மாநிலத்திற்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க, காங்கிரஸ் என கட்சி வித்தியாசமின்றி புதுவை எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் 2 நாள் அரசு முறை பயணமாக சென்றனர்.
கோவா சட்டமன்றத்தை நேற்றைய தினம் அவர்கள் சுற்றிப்பார்த்தனர். பின்னர் கோவா கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பேசினர். இன்றும் அவர்கள் கோவாவில் முகாமிட்டு பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை எம்.எல்.ஏ.க்கள் கோவா பயணத்தை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. விமர்சித்திருந்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள், கோவாவில் சூதாட்ட கிளப்புகளை பார்வையிட சென்றி ருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோவாவில் கட்டப் பட்டுள்ள புதிய சட்டமன்ற வளாகத்தை பார்வையிட்டு அதில் உள்ள வசதிகளை பார்வையிட சென்றி ருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே கோவாவுக்கு சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர்.
நேற்றைய தினம் கவர்னர், முதல்- அமைச்சர் சந்திப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை. புதுவை எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வைத்திலிங்கம் எம்.பி விமர்சித்திருப்பது
எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்ப டுத்தியுள்ளது. இதனால் ஆரம்பத்தில் கோவா பயணத்தில் பெயர் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அந்த பயணத்தை வைத்திலிங்கம் விமர்சனத்தால் தவிர்த்தனர்.
கோவா பயணத்தை முடித்து கொண்டு எம்.எல்.ஏ. புதுவை திரும்புகின்றனர்.