பசியை போக்குவதற்கு வழிகாட்டியவர் வள்ளலார்- கவர்னர் தமிழிசை பேச்சு
- புதுவை தலைமை ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் வள்ளலார்-200 என்ற பெயரில் வேல்.சொக்க நாதன் திருமண நிலையத்தில் மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபா நாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை தலைமை ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் வள்ளலார்-200 என்ற பெயரில் வேல்.சொக்க நாதன் திருமண நிலையத்தில் மாநாடு நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அகவல் படித்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 7 மணிக்கு சுத்த சன்மார்க்க நீதிக் கொடியை சாது சிவராமன் ஏற்றினார்.
அதைத்தொடர்ந்து சுத்த சன்மார்க்க கொள்கை விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் மாவட்ட தலைவர் சுகுமாறன் தொடங்கி
வைத்தார்.
மாநாட்டை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபா நாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், வள்ளலார் பற்றி பேசுவது மகிழ்ச்சி தருகிறது. நாம் செய்ய வேண்டியதையும், செய்யக் கூடாததையும் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து சொன்ன தீர்க்கதரிசி வள்ளலார்.
நோயினும் கொடிய நோய் பசி. அந்த பசியை போக்குவதற்கு அவர் அன்றே வழிகாட்டி இருக்கிறார். வள்ளலாரை படிக்க படிக்க வாழ்க்கை தூய்மை பெறும் என்றார்.
கடலூர் தமிழ் சங்க தலைவர் குழந்தை வேலனார், புதுவை சன்மார்க்க சங்க தலைவர் கணேசன், பொதுச் செயலாளர் கோதண்டபாணி, செயலாளர்
கோபாலகிருஷ்ணன், பொருளாளர் கஜபதி, வி.எஸ்.டெக்ஸ் உரிமையாளர்இசை கலைவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தென்னகத்தின் திருப்பு முனை வள்ளலார் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் யோகாசனம்ந டை பெ ற்றது. மாநாடு நிறைவு விழாவில் சன்மார்க்க நிர்வாகிகளுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி விருது வழங்கி கவுரவித்தார்.