புதுச்சேரி

கோப்பு படம்.

காய்கறி விலையை கட்டுப்படுத்த வேண்டும்-ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

Published On 2023-07-12 06:46 GMT   |   Update On 2023-07-12 06:46 GMT
  • அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏற்றம் கண்டுள்ளன. இதனால் புதுச்சேரி பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
  • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள்

எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து பொதுமக்கள் வாங்க முடியாத விலைக்கு சென்றுள்ளது. தக்காளி அதிகம் விளையும் மாநி லங்களில் பெய்த மழையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.20-க்கு விற்ற தக்காளி இப்போது ரூ.125-க்கு விற்கும் நிலை உள்ளது.

மற்ற காய்கறிகளும் தற்போது விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏற்றம் கண்டுள்ளன. இதனால் புதுச்சேரி பொது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அண்டை மாநிலங்களில் தக்காளி மற்றும் காய்கறி விலை கட்டுப்படுத்த உழவர் சந்தைகள் மூலமாக காய்கறி கள் அதிக அளவில் விற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்படுகின்றன.

மற்ற இடங்களில் பூட்டி கிடக்கிறது. புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகளும் திறக்கப்படாமல் உள்ளன.

இவற்றை அரசு திறக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

புதுவை அரசு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News