புதுச்சேரி

தேர்வில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் செல்வ கணபதி எம்.பி. பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்தபடம்.

விவேகானந்தா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2023-05-09 04:39 GMT   |   Update On 2023-05-09 04:39 GMT
  • பள்ளியில் தேர்வு எழுதிய 228 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
  • செல்வகணபதி எம்.பி. பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி:

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் புதுவை லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதாவது அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 228 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி பிரியதர்ஷினி 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி சந்தியா வைஷ்ணவி 595 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மதுமிதா 592 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவிகளுக்கு விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி எம்.பி. பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பள்ளியின் தாளாளர் செல்வகணபதி எம்.பி. கூறுகையில், `எங்கள் பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவர்களும், 500-க்கு மேல் 75 மாணவர்களும், 400-க்கு மேல் 68 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

பொருளாதாரம் பாடத்தில் 5 மாணவர்களும், வணிகவியலில் 13 பேரும், கணக்கு பதிவியலில் 8 பேரும், வணிக கணிதத்தில் 9 பேரும், கணினி பயன்பாட்டு பாடத்தில் 4 பேரும், கணினி அறிவியலில் 7 பேரும், வேதியியல் பாடத்தில் 8 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News