காமராஜர் விளையாட்டு கழகம் சார்பில் திருக்கனூரில் கைப்பந்து போட்டி
- அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைக்கிறார்
- விழாவுக்கு வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகிக்கிறார். திருநாவுக்கரசு வரவேற்கிறார்.
புதுச்சேரி:
புதுவை கே.ஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கழகம் சார்பில் 15-ம் ஆண்டு கைப்பந்து போட்டிகள் திருக்கனூர் போலீஸ் நிலையம் எதிரே நடக்கிறது.
7 மணிக்கு கைப்பந்து போட்டிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கு வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகிக்கிறார். திருநாவுக்கரசு வரவேற்கிறார். செந்தில் வாழ்த்துரை வழங்குகிறார்.
இன்றும், நாளை (ஞாயிற்றுக்கிழமையும்) நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.22 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.18 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 6-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 7-ம் பரிசாக ரூ.8 ஆயிரம், 8-ம் பரிசாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறப்பு பரிசாக ரூ.4 ஆயிரம், சிறந்த ஆட்டநாயகனுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.
பரிசுத்தொகையை ஊர் பிரமுகர்கள் வழங்கு கின்றனர். பரிசுக கோப்பைகளை விஜய் மக்கள் இயக்க மண்ணாடிப்பட்டு தொகுதி தலைவர் பாரதிதாசன் வழங்குகிறார். பந்து மற்றும் வலைகளை பரந்தாமன், மருதையன், வீரர்கள், விளையாட்டுக்கு தேவையான வசதிகளை தேவநாதன், சதீஷ், ராமு, ராதாகிருஷ்ணன், அருள்குமார் ஆகியோர் வழங்குகின்றனர்.