வ.உ.சி. - அன்னை தெரசா சிலைகளுக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை
- அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
- கிறிஸ்தவ பள்ளிகளின் பாதிரியார்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி புதுவை சட்டசபை எதிரே பாரதி பூங்காவில் உள்ள அவரின் சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில்சிலைக்கு மாலை அணிவித்தனர். பா.ஜனதா நிர்வாகிகள் செல்வம், ஜெயலட்சுமி, தமிழ்மாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும் சார்பிலும் வ.உ.சி மாலை அணிவிக்கப்பட்டது.
புதுவை அரசு சார்பில் அன்னை தெரசா நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அன்னை தெரசா சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், மற்றும்
எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் பாதிரியார்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.